அமெரிக்கருக்கு இல்லை:மேலும் 7?


கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR  பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த தூதரக அதிகாரி இன்று அதிகாலை 1.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த அதிகாரி இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது வெளியேற அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு தமது இராஜதந்திர பணியாளர்கள் வருகைதரும் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள், தரங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது.
939 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், 839 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன், இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

No comments