குடமுருட்டி பால திருட்டு:மூவர் கைது!


கிளிநொச்சி குடமுருட்டி பாலத்தின் இரும்புகளை திருடிய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி சந்திரசேகர இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வேளை பூநகரி பரந்தன் வீதியிலிருந்து சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான பாலத்தின் இரும்புகள் களவாடப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளர் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் கைது அரங்கேறியுள்ளது. 

No comments