மீன்குஞ்சு விடுவதல்ல அபிவிருத்தி:ரஜீவ்!


குளங்களில் மீன்குஞ்சுகளையும் இறால் குஞ்சுகளையும் விடுவது மட்டும் அபிவிருத்தியல்ல.சிலர் அதனை மட்டும் அபிவிருத்தியாக கருதுவதாக தெரிவித்துள்ளார் பொதுஜனபெரமுன கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ரஜீவ்.


யாழ்.ஊடக அமையத்தில் ஊடவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட அவர் நெடுந்தீவிலுள்ள குளமொன்றில் தனியார் ஒருவர் இறால் குஞ்சுகளை விட்டிருந்தார்.அரச மீன்பிடி அiமைச்சரோ அதனை தனது சாதனையாக சொல்லியிருந்தார்.

இறால் வளர்;ந்ததும் இதனை குஞ்சாக விடுத்த தனியார் பிடித்து சென்றுவிட்டார்.

ஊரிலுள்ள மக்களிற்கு அது பற்றி ஏதுமே தெரியாது.

இவ்வாறு தான் வடக்கில் தமிழ் தரப்புக்கள் முன்னெடுக்கின்ற அரசியலும் இருக்கின்றதென தெரிவித்தார் ரஜீவ்.

வாசுதேவ நாணயக்காரவின் இடது சாரி முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தரப்புக்களிடம் அரசிடம் சமர்ப்பிப்பதற்கு அரசியல் தீர்வாயினும் சரி,அபிவிருத்தி திட்டமாயினும் சரி எந்தவொரு முன்மொழிவும் தமிழ் தரப்புக்களிடமும் இல்லை.

அவர்களிடத்தே சலுகைகளை பெற்றுக்கொண்ட பின்னர் எந்தவொரு அரசியல் திட்டம் பற்றியும் பேச அருகதையில்லாதவர்களாக தமிழ் தலைவர்கள் இருந்துவிடுகின்றனர்.

சிலர் சொகுசு வீடு.சொகுசு கார் வேண்டுகிறார்கள்.அதன் பின்னர் வாய் மூடிவிடுகிறார்கள்.

சிலர் கைதான தம்பியை விடுவிக்க கதைத்துள்ளார்கள்.

இவ்வாறு ஒவ்வொருவரும் சலுகையினை பெற்ற பின்னர் எதனை அரசிடம் பேச முடியுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

வடக்கில் ஒன்றை பேசும் இவர்கள் கொழும்பில் இன்னொன்றை பேசுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது அரசிடம் அபிவிருத்திக்கான திட்டமிடல் இருக்கின்றது.அதனை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி தனது நகர்வுகளை முன்னெடுப்பதாகவும் ரஜீவ் மேலும் தெரிவித்தார்.  

No comments