அன்ரன் பாலசிங்கத்தின் மறுபிறப்பு சுமந்திரன்?


அன்ரன் பாலசிங்கத்தின் அறிவாற்றல், இராஜதந்திர முறையிலான அணுகுமுறை தற்போது சுமந்திரனிடம் உண்டு. எனவே அவர்  எம்மினத்துக்கு தேவையென நற்சான்றிதழ் கொடுத்துள்ளார் சிவஞானம் சிறீதரன்.

இதுவரை காலமும் மாவை சேனாதிராசா பக்கமிருந்த சிறீதரன் தற்போது சுமந்திரனின் பிரச்சார பீரங்கியாகி  சவால்கள்  விடுத்து வருகிறார்.

இதன் பிரகாரம் அவர் அவிழ்த்து விட்டுள்ள புதிய வேட்டில் எம்மினத்தைப் பொறுத்தவரைக்கும் சுமந்திரன் வேண்டும். அத்துடன் அவர் போல் இன்னும் பலர் தேவை. எம்மினம் ஒரு தேசிய இனமாக இந் நாட்டில் இருக்க வேண்டும் என்றால் புத்திஜீவிகள், அறிவாளிகளின் இருப்பு மிக முக்கியமானது என்று சுமந்திரனுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சிறிதரன்.

இதனிடையே அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப்பிட்டு அல்லக்கை சுமந்திரனை சிலாகித்துள்ளமை சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.

No comments