மாலி அதிபரை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்!

President Keita step downமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் போபக்கர் கீதாவை (Ibrahim Boubacar Keita) பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் மாலியின் தலைநகரின் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பாமாக்கோவில் ஒரு மத்திய சதுக்கத்தில் ஒன்று கூறிய ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை பாதிக்கும் பல நெருக்கடிகளை அதிபர் இப்ராஹிம் போபக்கர் கீதா தவறாகக் கையாளுவதாகக் கூறியே பதவி விலகலை வலியுறுத்தியுள்ளார்கள்.

"ஐபிகே, கெட் அவுட்" போன்ற முழக்கங்களைக் கொண்ட பதாகைகளை அசைத்தும் கோசங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிபரின் மாளிகைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


No comments