கொரோனாவுடன் வாழ தயாராகும் இலங்கை?


சிங்கள பேரினவாத தலைவர்களுடன் அனுசரித்து போனாலும் தென்னிலங்கை நம்ப தமிழர்களை சிங்களம் நம்புவதற்கு தயாராக இல்லை.

இதனிடையே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

அதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர்  நேற்று (03)  இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 66 பேர் நேற்று பகல்(03) இனங்காணப்பட்டுள்ளனர்.

35 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், இவர்களில்  14  பேர்  பங்களாதேசில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஏனைய 31 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கட்டாரிலிருந்து வருகைதந்து தனிமைத்தல் நிலையத்தில் இருந்த 19 பேர் இவ்வாறு தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், இருவர் குவைட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, வைரஸ் தொற்றுக்குள்ளான 902 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், 836 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

No comments