கிளிநொச்சியில் வெட்டுக்கிளி!


தென்னிலங்கையினை தொடர்ந்து கிளிநொச்சியிலும் வழமையாக காணப்படும் வெட்டுக்கிளிகளிற்கு அப்பால் சற்று பெரிதான தோற்றப்பாடுடன் சில வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை அச்சத்தை  தோற்றுவித்துள்ளது.

எனினும் வடக்கில் வெட்டுக்கிளிகளால் தாக்கம் இல்லை என விவசாய திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கிளிநொச்சி மாவட்டத்தில் வழமை போன்று காணப்படுவது போன்றல்லாத வெட்டுக்கிளியே வகையே விவசாயியினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே பிடிக்கப்பட்ட வெட்டுக்கிளி தொடர்பில் விவசாய திணைக்களம் ஆராய உள்ளது.

No comments