அமெரிக்கா, சீனா இடையே முறுகல்! பரஸ்பரம் இரு நாட்டு விமானங்கள் உள்நுழைய தடை;

அமெரிக்காவுக்குச் பயணச் சேவை வழங்கும் சீன விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்து விமானச் சேவைகளையும் தற்காலிகமாகத் தடைசெய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க விமான நிறுவனங்கள் சீனாவுக்கு மீண்டும் சேவையைத் தொடங்குவதற்கு பெய்ச்சிங் அனுமதி மறுத்ததையடுத்து, வாஷிங்டனின் உத்தரவு வெளியானது.
கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் போரும், அண்மை மாதங்களில் கிருமித்தொற்று தொடர்பான சர்ச்சைகளும் நிலவுகின்றன வேளையில் இந்த அறிவிப்பை டிரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments