மாநகரசபை சட்டத்தரணி விவகாரம்:தேர்தல் ஆணைக்குழுவிடம்!


யாழ்ப்பாணம் மாநகர சபையின் சட்டத்தரணியாக பணியாற்றும் தனது மைத்துனன் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடுகின்ற நிலையில் சட்டத்தரணி ரெமீடியஸ் எதிராக முறையிட்டுள்ளார்.

மாநகர சபையில் விடுமுறை பெறாமல் அரசியல் கட்சியில்; தேர்தலில் போட்டியிடுவதாக மு.றெமீடியசினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து தேர்தல் ஆணைக்குழு தனது முடிவினை மாநகர சபைக்கு எழுத்தில் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சட்ட ஆலோசகராக செயல்படும் ஸ்ரனிஸ்லஸ் செலஸ்றீன் என்னும் சட்டத்தரணி ஓர் ஒப்பந்தப் பணியாளர். அதாவது ஓர் அரச திணைக்கள உதவு தொகையினை பெறும் நிலையில் சபையில் விடுமுறை பெறாது வேட்பாளர் பட்டியலில் போட்டியிடுகின்றமை ஓர் தேர்தல் விதிமீறலாகும்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஓர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அந்த அறிவுறுத்தலில் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவடையும் வரையில் மேற்படி சட்டத்தரணியை சபை நடவடிக்கைகள் தொடர்பான எந்த வழக்கிலும் பயன்படுத்த வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

இதனிடையே செலஸ்ரீன் ஏற்கனவே அப்பதவியிலிருந்து நீக்;பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments