ஸ்கொட்லாந்து விடுதியில் கத்திக்குத்து! மூவர் பலி!

பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மேற்கு ஜார்ஜ் வீதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதிக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால் குத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர் தாக்குதலாளிய சுட்டுக்கொன்றனர். 

இந்த சம்பவத்தில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments