ஹூல் யாழிலிருந்து கொழும்பு வர 50ஆயிரம்?

கடந்த நான்கு வருடங்களாக நான் யாழ்ப்பாணத்திலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு வந்துபோகின்றேன் எனரட்ணஜீவன் ஹூல்தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள, அரச விடுதியில் தங்கியிருந்து தேர்தல் ஆணையகத்தின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், 350 கி.மீற்றருக்கு அப்பால் இருந்து பிரயாணிப்பவர்களுக்கான, போக்குவரத்துக் கட்டணமாகிய 50,000 ரூபா மாதந்த போக்குவரத்துக்கட்டணத்தை கடந்த நான்கு வருடங்களாக பெற்றுக்கொள்வதாக ‘மவ்பிம பத்திரிகை” குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், “கடந்த நான்கு வருடங்களாக நான் யாழ்ப்பாணத்திலேயே வசித்துவருகின்றேன், தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு அங்கிருந்தே வந்து போகின்றேன், அதற்கான போக்குவரத்துக் கொடுப்பனவு 50,000 ரூபாவை நான் பெறுகின்றேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் “அனைத்து ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் போக்குவரத்துக் கொடுப்பனவாக 350கி.மீற்றருக்குள் 25,000 ரூபாவும் 350 கி.மீற்றருக்கு மேல் 50,000 ரூபாவும் வழங்கப்படுகின்றது” எனவும் குறிப்பிட்டார்.

அவசியமேற்படும் போது, கொழும்பில், அரசினால் வழங்கப்பட்டுள்ள விடுதியை தான் பயன்படுத்துவதாகவும் அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக மாத்திரமே தான் காரியாலய வாகனத்தைப் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

No comments