ஆரம்பப்பள்ளியில் கத்திக்குத்து! மாணவர்கள் உட்பட 40 பேர் காயம்!

Knife Stabbing
சீனாவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர். 

சீனாவின் தெற்கே குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் உள்ள  வுஷோவின் வாங்ஃபு உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் இன்று வியாழக்கிழமை 8.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கத்திக்குத்தை நடத்தியவர் 50 வயதுடைய லி சியாமின் என்ற பள்ளிக்கூடத்தின் பாதுகாவலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலில் 37 மாணவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடத்தின் தலைமை அதிகாரி, பிறிதொரு பாதுகாவலர் மற்றும் மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளனர் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments