சிவகுமாரன் நினைவேந்தல் சனிக்கிழமை!


போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம்; எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை யாழில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு சாவடைந்தார். அவரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில் அமையப்பெற்றுள்ளது. 

சிவகுமாரனின்  சிலை அமைந்துள்ள வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை பொது அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய கெரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சகலரும் அஞ்சலி செலுத்துமுகமாகவே சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை உரைகள் எதுவும் இடம்பெறமாட்டாது. அதேவேளை உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், சமூக இடைவெளியுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. அகவணக்கத்தினைத்தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் குடும்பத்தினரும் அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்துதல் என்பன  இடம்பெறும் என தெரிவிக்க்பபட்டுள்ளது.

No comments