மீண்டும் புகையிரத சேவை!


Sri lanka Railway Department

இலங்கை முழுவதும் இன்றும் நாளைய தினமும் பிறப்பிக்கப்பட்டுள் ஊரடங்கினால் நாடு முடங்கியுள்ளது.

இதனிடையே இலங்கை முழுவதும் எதிர்வரும் 8ம் திகதி தொடக்கம் புகைரத சேவைகள் வழமைக்கு திரும்புவதாக புகையிரத திணைக்களம் அறிவித்திருக்கின்றது. 

சாதாரண நேர அட்டவணையின் படி தொடருந்து சேவைகள் இடம்பெறும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும்; கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான குளிரூட்டப்பட்ட நகர் சேர் தொடருந்து சேவை ஆகிய இரண்டும் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறாது என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து அன்றைய தினத்திலிருந்து தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. 


No comments