பிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்

Grant Shapps
பிரித்தானியாவில் இம்மாதம் யூன் 15 முதல் பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் சுவாசக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பிரித்தானியாவின் போக்குவரத்துச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை அவர் பொதுமக்களுக்கு வழங்கிய உரையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

யூன் மாதம் 15 ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் முடக்க நிலை தளர்த்தப்படவுள்ளது. விதிமுறைகள் தளர்த்தப்படுவதால் மக்கள் அதிகமாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் முன்னெச்சரிக்கையாக மக்கள் கண்டிப்பாக முகக் கவசங்கள் அணிய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

பேருந்துகள், தொடருந்துகள், மின்வண்டிகள் (டிராம்கள்), வானூர்திகள், கப்பல், தனியார் பேருந்துகள், கப்பலில் மற்றும் படகுளில் பயணிப்போர் கட்டாயம் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றார்.

மிக இளம் குழந்தைகள், ஊனமுற்றோர் மற்றும் சுவாச சிரமம் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார்.

No comments