யாழில் பாலச்சந்திரன்:கொழும்பில் கோத்தா!


ஒருபுறம் தேர்தல் அறிவிப்பின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் தனது ஆதரவு ஊடக அமைப்பொன்றை நிறுவ இந்திய துணைதூதர் முற்பட மறுபுறம் கோத்தபாய தரப்பு தமக்கான தமிழ் பத்திரிகை ஒன்றினை கொழும்பில் ஆரம்பித்துள்ளது.

யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்திற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரான பத்மினி சிதரம்பரநாதன் மகள் மூலமே இந்திய துணைதூதர் தமது எடுபிடி ஊடக அமைப்பொன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக யாழ்ப்பாண ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் வீரகேசரி நிறுவனப்பத்திரிகையில் பணியாற்றி வெளியேற்றப்பட்ட பத்மினி சிதம்பரநாதனின் மகளே தற்போது இந்திய துணைதூதரக முகவராகியுள்ள நிலையில் அவர் பின்னணியில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் போலி ஊடக நிறுவனம் உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்திய தினகரன் துணை ஆசிரியர் விதுசன் இச்சந்திப்பிற்கு தானும் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் கோத்தபாயவின் தமிழன் பத்திரிகையின் ஆசிரியராக அவரது தமிழ் பிரிவின் ஆலோசகரான சிவராசா நியமிக்க்பபட்டுள்ளார்.வீரகேசரியின் பணியாற்றி பின்பு சுடரொளியின் ஆசிரியராக இருந்தவர். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவின் வெற்றிக்காக பாடுபட்ட சிவராசா தற்போது இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.
ஏற்கனவே சுமந்திரன் அண்மையில் மகிந்தவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் சிவராசாவே செய்திருந்ததாக சொல்லப்படுகின்றது. 

No comments