குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார் கருணா

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாம் கொரோனாவை விட அபாயம் மிக்கவன் நான். விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் காலத்தில் 2 அல்லது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுத்தினரை ஆணையிரவு முகாமிலும், கிளிநொச்சி முகாமிலும் கொன்றுள்ளேன் என அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து தெரிவித்தார்.
 
கருணா வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மேலதிக காவற்துறைமா அதிபர் மூலம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைக்காக இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகியுள்ளார் கருணா.

No comments