சைபர் தாக்குதல்! திக்குமுக்காடுகிறது அவுஸ்ரேலியா!

அவுஸ்ரேலியா மீது சைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தற்போதுவரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்றும் அதை எவ்வாறு சரிசெய்யது என்பது குறித்து தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது பெரிய அளவு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

முக்கியமான உள்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை திருடி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் சைபர் தாக்குதல் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பது தெளிவாகப் புலனாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments