அடிமை வர்த்தகம்! மன்னிப்பு கோரியுள்ளன இங்கிலாந்து வங்கி மற்றும் சர்ச் ஆஃப் இங்கிலாந்து

அடிமை வியாபாரத்தில் தங்களது சில மூத்த நபர்கள் வகித்த பங்கிற்கு இங்கிலாந்தின் மத்திய வங்கி மற்றும் சர்ச் ஆஃப் இங்கிலாந்தும் மன்னிப்பு கோரியுள்ளன.

முன்னாள் பாங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநர்களும், இயக்குநர்களும் அதேபோல் ஒரு பிஷப் மற்றும் 100 மதகுருமார்களும் அடிமை வியாபரத்தில் இலாபம் ஈட்டியுள்ளனர் என வரலாற்று ரீதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட முன்னாள் ஆளுநர்களின் படங்கள் அதன் கட்டிடங்களில் பார்வையிடமுடியாதவாற இருக்கும் என்பதை உறுதி செய்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்ச் அதன் வரலாற்றை "அவமானத்தின் ஆதாரம்" என்று இதை விவரித்ததுள்ளது.

அடிமைத்தனத்திற்கும் சுரண்டலுக்கும் சமூகத்தில் இடமில்லை என்று ஒரு தேவாலய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அடிமை வியாபாரம் தொடர்பில் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (யு.சி.எல்) நடத்திய ஒரு தரவுத்தளத்தின் புதிய பகுப்பாய்வில், அடிமைத்தனத்தால் பயனடைந்த ஒரு பிஷப் உட்பட கிட்டத்தட்ட 100 மதகுருமார்கள் சர்ச் ஆஃப் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. 

அத்துடன் தரவுத்தளத்தில் ஆறு ஆளுநர்கள் மற்றும் இங்கிலாந்து வங்கியின் நான்கு இயக்குநர்கள் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டு இலபமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments