மலேசியாவில் 45 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் முதல், Selangor மாநிலத்தின் சட்டவிரோத பாதைகள் மூலம் பயணிக்க முயன்ற 45 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்கள் Sabak Bernam, Kuala Selangor, Klang Utara, Klang Selatan, Kuala Langat மற்றும் Sepang பகுதியில் நடந்த Ops Covid-19 மற்றும் Ops Benteng நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கைகள் மூலம் Selangor கடற்கரையோரம் இருந்த 61 சட்டவிரோத பாதைகள் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா கிருமித்தொற்று மலேசியாவில் பரவுவது கட்டுப்படுத்தும் விதமாக மலேசியாவில் பொது நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு கடந்த மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

No comments