தொடர்ந்தும் தடுப்பில் இளைஞன்?


வடமராட்சி – வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற மர்மப் பொருள் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரிஐடி) தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வல்லை இராணுவ முகாமுக்கு அருகே அண்மையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் இராணுவ அதிகாரி உட்பட இருவருக்கு சிறு காயம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் நீர்வேலியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரிஐடியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போதும் ரிஐடி கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments