கருணா விவகாரம்:கோத்தா பதிலளிக்கவேண்டும்?


கருணாவின் அண்மைய பிரசாரம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது கருத்தை தெரியப்படுத்த வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்திள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அனைத்து மக்களும் நாட்டில் ஐக்கியத்துடன் வாழும் ஒரு சூழலில் ஆனையிறவில் 2000 – 3000 வரையான இராணுவத்தினரை தானே கொலைச் செய்ததாக கருணா அம்மான் கூறியிருப்பது பொறுப்பற்ற கருத்தாகும் என கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கருத்துகளை தெரிவித்தவர்களான கருணா அம்மான், மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய பிரதான நபராக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஆளும் தரப்பினருடனே இணைந்துக் கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவித கருத்துகளையும் தெரிவிக்காது அரசாங்கம் அமைதிக்காத்து வருகின்றமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments