துப்பாக்கி சூடு:நீதி கோரி மக்கள் போராட்டம்!


மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் இளைஞன் பலியானதையடுத்து இன்றிரவு ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


விசேட அதிரடிபடையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மணல் ஏற்றச் சென்றதாக நம்பப்படும் உழவு இயந்திரத்தின் மீது அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலேயே இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்.

உழவு இயந்திரத்தின் பின்பெட்டியில் நான்கு இளைஞர்கள் இருந்தனர் எனவும் இதில் கெற்பெலியை சேர்ந்த திரவியம் இராமகிருஸ்ணன் (24) என்ற இளைஞனின் தலையில் துப்பாக்கிச்சூடு பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலம் பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments