எங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்?


கனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முறை தேர்தல் பிரச்சாரத்திற்கென பெருமளவு பணம் சட்டவிரோத முறையில் நாட்டினுள் வருகின்றமை அம்பலமாகியுள்ளது.

வடமராட்சி பருத்தித்துறை நகரசபை,நெல்லியடி மற்றும் புலோலி பிரதேசசபைகள் ஊடாக இத்தகைய கருப்பு பணம் வந்தடைந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

வேட்பாளரது பெயரிலோ அல்லது நெருங்கிய ஆதரவாளரது பெயரிலோ அல்லாது அப்பாவி பொதுமக்களது பெயரில் இத்தகைய நிதி  வந்தடைந்தமை அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் பருத்தித்துறை ஹற்றன் நசனல் வங்கியில் காவலாளியாக பணியாற்றும் இளைஞர் ஒருவரது கணக்கிற்கு கடந்த வாரம் 8 மில்லியன் பணம் வெளிநாடொன்றிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதில் சந்தேகம் கொண்ட வங்கி முகாமையாளர் காவலாளியிடம் இது தொடர்பில் அழைத்து வினவியுள்ளார்.

அப்போதே கூட்டமைப்பு சார்பு பருத்தித்துறை நகரசபை தலைவர் தனது வங்கி கணக்கின் விபரத்தை பெற்றிருந்ததாகவும் பின்னர் தீடீரென தன்னிடம் வந்து மக்களிற்கு உதவ  நண்பர் ஒருவர் எட்டு மில்லியன் பணத்தை அனுப்பி வைத்திருந்ததாக கூறி அதனை பெற்றுச்சென்று விட்;டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இம்முறையும் எம்.ஏ.சுமந்திரனை வெல்ல வைக்க நிதி வந்தடைவது அம்பலமாகியுள்ளது.

எனினும் இப்பணம் யாரின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென்பது உறுதியாகவில்லை.

இதனிடையே தமிழ் அரசுக் கட்சியின் கனடாக் கிளை மூலம் 2010 போர் முடிவிற்கு பின்னர் கட்சிக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுப்பிய பணத்துன் மொத்தப் பெறுமதியே 5 கோடி ரூபாவினையும் தாண்டவில்லை என தமிழ் அரசுக் கட்சியின் கனடாக் கிளைத் தலைவர் வேலுப்பிள்ளை  தங்கவேல் தனது ஆதரவாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

No comments