இலங்கை வர பின்னடிக்கும் கண்காணிப்பாளர்கள்?


நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பிற்கு சசர்வதேச கண்காணிப்பாளர்கள் மிக குறைந்த தொகையினரே இலங்கை வரவுள்ளதாக தெரிய வருகின்றது.

ஓகஸ்ட் 5ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்கும் நடவடிக்கைக்கு இலங்கை வரும் சர்வதேச பிரதிநிதிகள் கொரைன்டன் நடவடிக்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்பே கண்காணிப்பு்பணியில் ஈடுபடல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. 

இதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் நால்வரும் , தென் கொரிய நாட்டவரும் , ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளும. வருகைதர இணக்கம் தெரிவித்தபோதும் எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை.

இதேநேரம் கடந்த தேர்தலில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 80 பிரதிநிதிகள் வருகை தந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது

No comments