பிரித்தானியாவுக்கு நுழைவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் கட்டுப்படுத்தும் விதமாக அயர்லாந்து குடியரசைத் தவிர வேறு எந்த நாட்டிலிருந்தும்
பிரித்தானியாவுக்கு வரும் எவருக்கும் 14 நாள் தனிமைப்படுத்தலை அரசாங்கம் கொண்டு வரும் என்று தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.

புதிய கட்டுப்பாடு இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வாரந்தோறும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியா வரும் பிரித்தானியர் அல்லாத மக்கள் வாடகைக்குரிய தனியார் தங்குமிடங்களில் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பயணக் கட்டுப்பாடு எவ்வளவு காலம் அமுலில் இருக்கும் என்பதும், இங்கிலாந்து அல்லாதவர்கள் வாடகைக்கு விடப்பட்ட தனியார் தங்குமிடங்களில் தங்க அனுமதிக்கப்படுவார்களா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

தனிமைப்படுத்தல் பிரித்தானியா விமானத் தொழிலில் மட்டுமல்ல, பரந்த பொருளாதாரத்திலும் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து விமான நிலையங்கள் பரிந்துரைத்தன.

பொருட்களை எடுத்துவரும் பாரவூர்தி ஓட்டுநர்கள் மற்றும் கப்பல் துறையில் பணிபுரியும் நபர்கள் போன்ற முக்கிய தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என நம்பப்படுகிறது.

No comments