மீண்டும் ஆய்வுகள்:மருத்துவ பீடத்தில் பிரச்சினையில்லையாம்?


யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் கொரோனா பரிசோதனைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பீடாதிபதி எஸ்.ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்; த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி எஸ்.ரவிராஐ; இணைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.

மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து ஆய்வு கூடம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் இதனை மறுதலித்துள்ள மருத்துவ பீடாதிபதி எஸ்.ரவிராஜ் ஆய்வு ஆய்வு கூட உபகரணங்களை நகர்த்தும் நடவடிக்கை ஒன்றிற்காகவே ஆய்வுகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்.போதனாவைத்தியசாலையின் ஆய்வு கூட பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே மருத்துவ பீட ஆய்வு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி திருத்த வேலைகளை மேற்கொண்டதாக தெரிவித்த அவர் மீள பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை பற்றி விசாரிக்க குழு ஏதும் வருகை தருவது பற்றி தகவல்கள் தனக்கு கிடைத்திருக்கவில்லையென  பணிப்பாளர்; த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி எஸ்.ரவிராஐ; ஆகியோர் இணைந்து மறுதலித்துள்ளனர்.

No comments