தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்ப்பில் முன்னெடுத்த மே18 நினைவேந்தல் நிகழ்வுகள்

தமிழ்த்தேசியம் பேரியக்கம் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மே 18-முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்
அனுசரிக்கப்பட்டது.

தஞ்சை தமிழத் தேசிய பேரியக்கம் அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வைகறைதலைமை வகித்தார். தமிழ்த் தேசிய பேரியக்கதலைவர் ஐயா.பெ.மணியரசன் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில், தோழர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், நகர தலைவர் ராமு, வழக்கறிஞர் சிவராஜ் முனியாண்டி, ஜேகே. பன்னீர்செல்வம், செம்மலர் உட்பட 30 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல் தமிழீழத்தின் முள்ளிவாய்க்காலில் 2008 - 2009ஆம் ஆண்டுகளில் இந்திய அரசின் துணையோடு சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ ஈகியருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சிதம்பரம் கிளை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  தமிழத்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், சென்னை, மதுரை, திருச்சி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம்,ஓசூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கிப்பட்டி, திருவள்ளூர், திருச்செந்தூர், தர்மபுரி, கிருட்டிணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மே18 நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

No comments