இலங்கை ஆமிக்கு வீரமுள்ளதா?இல்லையா? விடயம் விவகாரமாகின்றது.


இலங்கை படைகளிற்கு வீரமிருக்கின்றதாவென யாழ்ப்பாணத்து உள்ளுர் அரச ஆதரவு தொலைக்காட்சி படப்பிடிப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் வெசாக் தினத்தை முன்னிட்டு வீரமிக்கபடையினரால் உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதாகவும் ஊர்காவற்துறை மக்களுக்கு உலர்உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் இவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான இவர் வேலை வாய்ப்பு பெற்று தருவதான மோசடி தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டு சிறை சென்று திரும்பியுமிருந்தார்.

இந்நிலையில் குறித்த தொலைக்காட்சி படப்பிடிப்பாளர் தொடர்ந்தும் வீரம் மிக்க இலங்கை படையினர்,அதிரடிப்படையினர் என நையாண்டி செய்வது தொடர்பில் பலாலி இராணுவ தலைமை கடும் சீற்றமடைந்து எச்சரித்ததாக தெரியவருகின்றது.

இதனிடையே வெசாக் உதவியென்ற பேரில் படையினர் ஈபிடிபியை முன்னிலைப்படுத்துவதாக கூட்டமைப்பு சீற்றமடைந்துள்ளது.

இப்படத்தில் சிவப்புநிற சேட் அணிந்து அமர்ந்திருப்பவர் ஊர்காவற்துறை பிரதேச சபை உபதவிசாளர் ஈபிடிபி கிளரன்ஸ் . இன்றைவரைக்கும் ஈபிடிபி கும்பலால் ஒரு றாத்தல் பாண் கூட மக்களுக்கு வழங்கப்படவில்லை . கட்சியென்ற அடிப்படையில் நோக்கினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் , சைக்கிளும் , அங்கஜன் தரப்பினருமே நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர் . தற்போது ஈபிடிபி குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி காணப்படுகின்றது.அதனை நிவர்த்திசெய்ய அராலித்துறை முகாம் ராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஈபிடிபி வலிந்து உட்புகுத்தப்பட்டுள்ளது . தற்போது அங்கு தாமே நிவாரணம் வழங்கியதாக ஈபிடிபி கும்பல் கதையளந்துவிட்டுள்ளதாக கூட்டமைப்பின் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.

No comments