விஷவாயு கசிவு - பலர் மரணம்

இந்தியா- ஆந்திரபிரதேசம், விசாசகப்பட்டிணம் நகர தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் 9 பேர் உயிரிழந்ததுடன் சுமார் ஆயிரம் பேர் வரையில் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்.ஜி. பொலிமர்ஸ் இந்தியா எனும் பொலிமர் தொழிற்சாலையொன்றில் இன்று (7) அதிகாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறுவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விலங்குகளும் பல பாதிக்படைந்துள்ளன.

No comments