ஒரே இலங்கை:இரு சட்டங்களாம்!


கொரோனாவில் மரணமடைந்தவர்கள் சிங்களவரா அல்லது முஸ்லீமா என்பதை பொறுத்தே இறுதிக்கிரியைகள் நடக்கும் பரிதாபம் இலங்கையில் நடந்துள்ளது.

இந்நாட்டிலுள்ள முஸ்லீம் மக்களுக்கான கௌரவமானதும், பாதுகாப்பானதுமான வாழ்வை வழங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் கௌரவமான இறுதிச் சடங்கையாவது வழங்குங்கள். முஸ்லிம்ககிளுக்கெதிரான இந்த குறிவைத்த இனத்துவேசமானது, பௌத்த தர்மப் போதனைகளுக்கு எதிரானது. இதனை நிறுத்துங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கோரியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த எட்டாவது சிங்கள நோயாளிக்கு குடும்பத்தவர்கள்,பிக்குகள் அஞ்சலிக்க அனுமதித்த கோத்தா அரசு முஸ்லீம் ஒருவர் மரணித்த போது ஒருவருக்கு மட்டும் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments