மீண்டும் குத்துச் சட்டைப் போட்டிக்குத் திரும்புகிறார் மைக் டைசன்

முன்னாள் குத்துச்சட்டை நட்சத்திரமும் உலக சம்பியனுமான மைக் டைசன் மீண்டும் குத்துச் சட்டைப் போட்டிக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.


53 வயதான மைக் டைசன் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நான்கு சுற்று குத்துச் சட்டைப் போட்டியில் விளையாடவுள்ளார். இதற்கான கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் எடையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

மைக் டைசன் பயிற்சி பெறும் சிறு காணொளி ஒன்று வெளியிட்ட சில நிமிடங்களில் வைரலானது. 15 ஆண்டுகளுக்கு மேலாக குத்துச்சட்டையில் விளையாடத முன்னால் உலகச் சம்பியன் மைக் டைசன் புதிய பயிற்சியாளரான எம்.எம்.ஏ ரஃபேல் கோர்டீரோவுடன் பயிற்சில் ஈடுபட்டு வருகிறார்.

No comments