கொழும்பிலேயே ஆட்டம்:யாழ்ப்பாணம் ?


யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகள் தொடர்பில் சர்ச்சைகள் எழுப்பப்பட்ட நிலையில் கொரோனா தொற்று குறித்து இதுவரை
முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கைகளில் 13 அறிக்கைகளில் குறைப்பாடுகள் காணப்படுவதாக, மருத்துவ ஆய்வக வல்லுநர்களின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு தவறான அறிக்கை வெளியிடப்பட்டமை குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்களாக உறுதிசெய்யப்பட்ட சிலருக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இதனிடையே யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகள் தொடர்பில் மருத்துவத்துறை சார்ந்த சிலர் எழுப்பிய சந்தேகங்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் அதனை விமர்சித்த சிலரை யாழிலுள்ள ஊடக நிறுவன உரிமையாளர் மிரட்டியுள்ளார்.அவர்கள் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென அவர் மிரட்டலில் தெரிவித்துள்ளார். 

No comments