ஜனாதிபதி வெளியே:ஏனையோர் வீடுகளில் முடங்கியவாறு வெசாக்?


கொரோனா வைரஸ் தொற்று இலங்கையினை ஆட்டிப்படைக்க இயல்பு வாழ்க்கையினை தோற்றுவிக்கப்போவதாக அரசு கங்கணம் கட்டி
நிற்கின்றது.

ஜனாதிபதி சமூக இடைவெளி ஏதுமின்றி வெசாக் கொண்டாட்டங்களில் பிக்குகள் சகிதம் பங்கெடுத்து அதனை பிரபல்யப்படுத்தியுமுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என நேற்று முன்தினம் இனங்காணப்பட்ட மூவருக்கு கொரோனா தொற்று இல்லை என நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜகிரிய, கொலொன்ன பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை செவிலியர் ஒருவர் என மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று குறித்த மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் முடங்கிக்கொண்டு வெசாக் அனுஸ்டித்துள்ளனர்.

வீடுகளிற்கு பிக்குகளை அழைத்து வெசாக் தானங்களில் ஈடுபட்டதுடன் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் முன்னாள் அமைச்சர் கஜந்த கருணாதிலக.

No comments