குணமடைந்தவருக்கு மீள தொற்றிய கொரோனா - அதிர்ச்சி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜா-எலவை சேர்ந்த 67 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 17ம் திகதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் ஏப்ரல் 17ம் திகதி முழுமையாக குணமடைந்த நிலையில் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் வீட்டில் சுய தனிமையில் இருந்த குறித்த நபர் நெஞ்சுவலி காரணமாக ஏப்ரல் 30ம் திகதி வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட போது மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments