கள்ள மணல் ஏற்றியோர் மடக்கி பிடிக்கப்பட்டனர்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் இன்று (2) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினரினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வாகனேரி, பொண்டுகள்சேனை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றுள்ளனர்.

No comments