குணசிங்கபுர வாசிகள் களிக்காட்டில் சங்கமம்

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத்தள தனிமை நிலையத்தில் இருந்த முதியவர்கள் இருவர் நேற்று முன்தினம் (1) உயிரிழந்திருந்தனர்.

குணசிங்கபுரத்தை சேர்ந்த வேலு சின்னத்தம்பி (80), பி.ஜி.மார்டீன் (81) ஆகியோரே உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதன்படி இருவரது உடலையும் சேர்த்து தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னதாக ஒருவரின் உடலை குமாரபுரம் மயானத்தில் தகனம் செய்ய முயற்சித்த போது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வவுனியா மின்சார மயானத்துக்கு குறித்த உடலை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அங்கு மின்சார இயந்திரம் பழுதடைந்ததால் முல்லைத்தீவில் உள்ள களிக்காட்டில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தவகையில் முல்லைத்தீவு நீதிவானின் அனுமதியுடன் இரு உடல்களும் களிக் காட்டுப்பகுதியில் நேற்று (2) நள்ளிரவு தகனம் செய்யப்பட்டன.

No comments