கோட்டை விடுகின்றதா ஆய்வுகூடம்:யாழில் சந்தேகம்!


கொரோனா தொற்று தொடர்பில் ஆய்வுகளை செய்து உறுதிப்படுத்திவரும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு சுட கருவிகளது இயங்கு திறன் தொடர்பில் உள்ளக தகவல்களை முன்னிறுத்தி ஆங்கில செய்தி இணையமொன்று செய்தியினை வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தினசரி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். யாழ்ப்பாண மருத்துவமனை அதன் சோதனை உபகரணங்களைப் பயன்படுத்தி திறம்பட இது வரை தனது கொரோனா தொற்றுக்கள் தொடர்பிலான ஆய்வுகளை செய்திருக்கவில்லை.அத்துடன் அதன் பணிகள் ஆரம்பிக்கப்படவேயில்லை.ஆனாலும் தமது ஆய்வு கூட பணிகள் ஆரம்பமாகுமென கடந்த ஒன்றரை மாதத்தில் இரு தடவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் கொரோனா தொற்று தொடர்பிலான வடமாகாண மாவட்டங்களிற்கான சோதனைகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் மருத்துவ பீட ஆய்வுகருவிகளது இயங்கு நிலை தொடர்பில் அதன் உள்ளக பணியாளர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக சொல்லிக்கொள்ளத்தக்கதாக கொரோனா பாதிப்பிற்குள்ளானவர்கள் தொடர்பில் அவை உறுதிப்படுத்த தவறிவருகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் அத்தகைய குழப்பம் ஏற்பட்டதனையடுத்து  வடிகட்டிய நீருடன் சரிபார்ப்பு சோதனைகள் செய்யப்பட்ட போதும் அதிலும் திருப்தியான பதில் கிடைக்கவில்லையென தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், ஆய்வு கூட பொருட்களை வழங்கும் நிறுவனத்தின் பொருட்களது தரம் தொடர்பிலும் சில தரப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஏற்கனவே மருத்துவ பீடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்படும் மாதிரிகள் தெல்லிப்பளை கொண்டு செல்லப்பட்டே எரியூட்டப்படுகின்றது.இது  சோதனைச் சூழலை மாசுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இத்தகைய போக்கு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களிடையே கவலையைத் தூண்யுள்ளது.


யாழ்.குடாநாட்டில்  கொரோனா வைரஸ் பரந்து நாற்பத்தைந்து நாட்கள் கடந்துவிட்டது.ஆயினும்யாழ்ப்பாணத்தில் உள்ள போதனா மருத்துவமனையின் ஆய்வு கூட சோதனை ஆரம்பிக்கப்படாதேயுள்ளது.

வடக்கு ஆளுநர் மற்றும் கொழும்பு அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார். ஆனாலும் வடக்கு மக்களது உயிருடன் விளையாடுவது போன்ற மனநிலை உள்ளுரிலுள்ள பலரிடம் நிலவுவதாக குறித்த ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது. 

No comments