தீயில் நாசமாகிய லயன் வீடுகள்; வீதிக்கு வந்த 50 பேர்

நுவரெலியா - ஹட்டன் பொலிஸ் பிரிவு, எபோட்சிலி தோட்ட லயன் தொகுதியில் நேற்று (2) இரவு 6.30 - 8.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட தீயினால் 14 குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் பொதுமக்களும் ஹட்டன் டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் இணைந்து கடும் முயற்சியால் 2 இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதன்போது 14 குடியிருப்பு தொகுதிகளைக் கொண்ட குறித்த லயன் தொகுதியில் 08 குடியிருப்புகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. ஏனைய குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட 50 பேர்வரையிலானோரை தோட்ட மண்டபத்திலும் ஆலயத்திலும் தங்கவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகிறனர்.

No comments