கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த யுவதி

வவுனியா - செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் நேற்று (2) இரவு கிணற்றில் வீழ்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.

செட்டிகுளம் பிரதேச சபையில் பணியாற்றும் கலைவாணி திருக்கேதிஸ்வரநாதன் (21-வயது) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு அவர் கிணற்றில் வீழ்ந்ததை அவதானித்த உறவினர்கள் கிணற்றில் இருந்து அவரை மீட்டெடுத்து வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments