வடகொரியா தென்கொரியா இடையே எல்லை மோதலால் பதற்றம்!

வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளிடையே சரமாரியான தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.41
மணியளவில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் இராணுவ மயமாக்கல் பகுதியில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

தென்கொரிய படையினரின் காவலரண்கள் மீது வடகொரியப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் இரண்டு சுற்று தாக்குதல்களை நடத்தியதாக தென்கொரிய கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல்களால் எதுவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் தாக்குதல் நடவடிக்கைகள் எதுவும் இடம் பெறாமல் இருப்பதற்கு தொடர்பு வழிகள் ஊடக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இதேநேரம் தாக்குதல்களுக்கு தங்களது படைகள் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

வட கொரியா தனது தலைவர் கிம் ஜாங் உன் தனது உடல்நிலை குறித்த கடுமையான ஊகங்களை அனைத்துலக ஊடகங்கள் வெளியிட்டு வந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை உரத் தொழிற்சாலையைத் திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் தோன்றினார். இந்நிகழ்வு நடைந்து ஒரு நாள் கழித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகள் இடையே அமைந்துள்ள இராணுவப் பிரசன்னம் இல்லாத எல்லைப் பகுதி 248 கிலோ மீற்றர் தூரமும் 4 கிலோ மீற்றர் அகலமும் கொண்டது. இதை (DMZ - Demilitarized Zone என அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகப் பொிய இராணுவ மயமாக்கப்பட்ட எல்லைப் பகுதி.

இவ் எல்லைப் பகுதியில் 2 மில்லியனுக்கு அதிகமான மிதிவெடிகள், கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொறிகள், முள்வேலிகள் என அமைக்கப்பட்டு ஒரு பதற்றமான ஒரு போர் பகுதியாக அது எப்போதும் காட்சியளிக்கும்.

இப்பகுதியில் 2017 இல் இறுதியாக வடகொரியா சிப்பாய் ஒருவர் தென்கொரியாவுக்கு தப்பி ஓடிய போது இறுதியாக துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்துள்ளன.

2018 வடகொரிய தென்கொரிய பேச்சுக்களை அடுத்த இருதரப்பும் இப்பகுதியில் முன்ரங்கில் சில காவலரண்ளையும் கண்ணிவெடிகளையும் அகற்றின.

ஆனால் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டைக்கு மத்தியில் இந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன.

பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக வட கொரியா தனது ஆயுதக் களஞ்சியத்தை கைவிடுமாறு வலியுறுத்திய நிலையில் இன்று இப்பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

No comments