அரியாலையில் அச்சம்:முடக்கப்பட்ட கிராமங்கள் விடுவிப்பு?
சிகிச்சையின் பின்னராக அரியாலை திரும்பிய பொதுமக்கள் ஜவர் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை பல மட்டங்களிலும் தோற்றுவித்துள்ளது.
அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை பல மட்டங்களிலும் தோற்றுவித்துள்ளது.
ஏற்கனவே மருத்துவ பீட ஆய்வுகள் பற்றிய சர்ச்சை தொடரும் நிலையில் தென்னிலங்கையில் நேற்று (14) பதிவான 10 பேரில் 8 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனைய இருவர் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்களென அவர் தெரிவித்துள்ளார். கடற்படையைச் சேர்ந்த 479 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 137 கடற்படை வீரர்கள் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று பரவலையடுத்து முடக்கப்பட்டிருந்த கொழும்பு 12பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக, சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் முடக்கப்பட்ட பகுதிகள் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், தனிமைப்படுதலை நிறைவுசெய்திருந்தாலும் மேலும் சில தினங்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment