மந்திகை சூடு: திட்டமிட்டு நடந்ததா?


நேற்று வியாழன் இரவு 11.30 மணியளவில் மந்திகை சந்தியில் ஊரடங்கு வேளையில்; மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பசுபதி தனுசன்
(வயது 23) என்ற இளைஞன் மீது படையினர் திட்டமிட்டே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஆயினும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் ராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டுள்ளது. அதன் போதே துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர் புலோலி மாவடி பருத்தித்துறையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞன் வீடு சென்றிருந்த நிலையில் பின்னர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சட்டவிரோத மண் ஏற்றும் குழுவினரால்; வீதியால் பயணித்த இராணுவத்தினர் மீது மந்திகை பகுதியில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் இராணு சிப்பாய் ஒருவர் காயங்களுடன் அதே பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்  வீச்சினையடுத்து  படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்தில்  மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற தனுசன் மீது சந்தேகத்தின் பேரில் திட்டமிட்டே இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

No comments