போக்குவரத்து கெடுபிடி மேலும் தளர்வு?


வடக்கு மகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு விதிமுறைகள் இன்றுமுதல் (15) சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களுக்கிடையில் அதிக பட்சம் இரண்டு நாட்களுக்கிடையில் பயணத்தை முடிவுறுத்தக்கூடியவர்களுக்கு மருத்துவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் எடுக்க வேண்டிய சுகாதார சான்றிதழ் அவசியம் இல்லை.


தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் தங்கியிருக்கவேண்டிய தேவை உள்ளவர்கள் மேற்படி சுகாதார சான்றிதழ் பெற்று பயணத்தை மேற்கொள்வது அவசியம்.
வடமாகாணத்துக்கு வெளியே உள்ள ஏனைய மாவட்டங்களுக்கு (ஊரடங்கு அமுலில் இல்லாத மாவட்டங்கள்) அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் மருத்துவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெறப்படும் சுகாதார சான்றிதழ் கிடைத்ததும் பயணத்தை மேற்கொள்ளலாம்.
கொழும்பில் இருந்து வருகைதந்து மீண்டும் தமது சொந்த இடமான கொழும்புக்கு செல்லமுடியாதவர்கள் தமது பகுதி கிராம அலுவலர் ஊடாக தமது பயணத்துக்காக விண்ணப்பிக்கலாம் இதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக
யாழ் செயலகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments