துரத்துகிறது:கூடி உணவு உண்ண வேண்டாம்?


இலங்கை அரசு இயல்பு வாழ்வினை ஏற்படுத்த முட்டி மோதி வருகின்ற போதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர் காலி-கராப்பிட்டிய வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. 


கராப்பிட்டியவில் இனங்காணப்பட்டவர்கள் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கொரோனா வைரஸ் பரவலானது மீண்டும் ஏற்படாதிருக்க மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இல்லையொன்றால், மீண்டும் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீண்டும் பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டுமென குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே வடமாகாண அலுவலகங்களை பிற்பகல் 4.15 வரை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments