தேசிய தலைவரை விட தலைவரில்லை?


எங்களிற்கு தேசிய தலைவரை விட சிறந்த தலைவர் இல்லை என்றே சொல்லுவோம் அது தான் உண்மை. ஆகவே காலம் தான் ஒவ்வொன்றின் பெறுமதியையும் கணிக்கும். வரலாறுகளை எவராலும் மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது என தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்.


இன விடுதலைப்போராட்டமானது என்பது நீண்ட வரலாற்றை கொண்டது தந்தை 1949 ஆரம்பித்த அகிம்சை வழி போராட்டமானது தேசிய தலைவரின் தலைமையில் ஆயுதப்போராட்டமாக மாறியது இன்று சம்பந்தன் தலைமையில் இராஜதந்திர போராட்டமாக நகர்கின்றது. ஆகவே இந்த மூன்று. முறைகளுமே எமது மக்களிற்கவும் எமது இனவிடுதலைக்குமானதே இதில் எதையுமே நாம் குற்றம் சொல்லமுடியாது.

அகிம்சை வழி போராட்டத்திற்கு ஆர்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் முக்கியமானது அதே போல ஆயுத போரட்டத்தில் வீரமான தலமைத்துவமும் ஆயுதங்களும் முக்கியமானது அதே போல இராஜதந்திர போராட்டத்தில் சிறந்த இராஜதந்திரம் முக்கியம். தந்தை செல்வாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் தந்தையை விட ஒரு தலைவர் இல்லை என்று சொல்வார்கள் . எங்களிற்கு தேசிய தலைவரை விட சிறந்த தலைவர் இல்லை என்றே சொல்லுவோம் அது தான் உண்மை. ஆகவே காலம் தான் ஒவ்வொன்றின் பெறுமதியையும் கணிக்கும். வரலாறுகளை எவராலும் மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது என சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவரது வலது கையான சுகிர்தன் எங்களிற்கு தேசிய தலைவரை விட சிறந்த தலைவர் இல்லை என்றே சொல்லுவோம் என தெரிவித்துள்ளார்.

No comments