பெரியபொக்கணை பகுதிக்கான நீர்வழங்கல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதா?

கடந்த பல வருடங்களாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு
சபையினரால் வாதரவத்தை -அக்காச்சி எழுச்சி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலாவரை பகுதியில் இருந்து நிலக்கீழ் குழாய் மூலமான நீர்வழங்கல்கள் உரிய நேரப்பகுதியில் மக்களுக்கு கிடைப்பதில்லை என்று அப்பகுதி  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கடந்த ஒருமாத காலமாக இந்த பகுதி மக்களுக்கான நீர்வெட்டு இடம்பெற்று வருவதாகவும், மாவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரிடம் முறையிட்டும் இதுவரை மக்களுக்கான குறித்த பிரச்சினைக்கான  தீர்வு கிடைக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மக்களின் கோரிக்கைக்கமைவாக சமூகசேவை அமைப்பு ஒன்று பிரச்சினையை கவனத்தில் எடுத்து அப்பகுதி மக்களுக்கான நீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு,பௌசர் மூலமான நீர்வழங்கல்களுக்கு  ஏற்பாடு செய்துள்ளது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

No comments