இலங்கை ஆயிரத்தை தாண்டியது?


இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதான பிரச்சாரத்தின் மத்தியில் மேலும் 28 கொரோணா நோயாளிகள் காத்தான்குடி வைத்தியசாலை அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அம்பாறை – ஒலுவில் துறைமுக தனிமைப்படுத்தல் மையத்தில் மேலும் 28 கடற்படையினருக்கு இன்று (19) மாலை கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்திருந்தார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களே காத்தான்குடி வைத்தியசாலை அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments