இறக்குமதியாகும் கொரோனா:பாடசாலைகள் திறப்பு!


கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (24) அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய ஒரே நாளில் 52 தொற்றாளர்கள் நேற்று (24) பதிவாகியுள்ளனர்.

இவர்களில் 49 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டோரில் 42 பேர் மின்னேரியாவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என்பதுடன், 7 பேர் திருகோணமலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இவர்கள் பெல்வெஹேர தனிமைப்படுத்தல் நிலையத்திலில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதனிடையே பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், நாளை (26) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இக்கலந்துரையாடலின்போது, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான முறையாக திட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளை மூட கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments