யாழ்.மருத்துவ பீடத்தில் தனிமைப்படுத்தல்: பரீட்சை

யாழ்ப்பாணம் உட்பட பல்லைக் கழக்கங்களின் மருத்துவபீட மாணவர்களின் இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சையை எதிர்வரும் 15ம் திகதி சுகாதார நடவடிக்கைகளுடன் நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 8 பல்கலைக் கழகங்களில் தற்போது மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் 4 பல்கலைக் கழகங்களில் இம் மாணவர்களின் பரீட்சை முடிவுற்றுள்ளபோதிலும் யாழ்ப்பாணம் உட்பட 4 பல்கலைக் கழகங்களில் பரீட்சைகள் இடம்பெறவில்லை. இவ்வாறு இடம்பெறாத பல்கலைக் கழகங்களில் மருத்துவபீட இறுதியாண்டு மாணவர்களின் பரீட்சைகளை நடாத்தி முடிப்பதற்காகவே குறித்த கோரிக்கை சுகாதார அமைச்சிற்கு முன்வைக்கப்பட்டது.

இதில் கொழும்பு , பெரதேனியா , ரஜரட்ட ஜெயவர்த்தனபுர ஆகிய பல்கலைக் கழகம் மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சைகளை நிறைவு செய்தபோதும் றுகுணு , யாழ்ப்பாணம் , களணி , கிழக்கு பல்கலைக் கழகங்கள் பரீட்சை இடம்பெறவில்லை. இதன் அடிப்படையிலேயே குறித்த கோரிக்கை சிபார்சு செய்யப்பட்டது.


இதன் பிரகாரம் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டும் எதிர்வரும் 1ஆம் திகதி விடுதிகளிற்கு சமூகமளிக்க வேண்டும். அவ்வாறு சமூகமளிக்கும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தளிற்கு உட்படுத்தப்படுவார்கள். அதன் பின்பு பரீட்சை இடம்பெறவுள்ளது.

No comments